ஸ்ரீ யோக ராமர் கோவில்
ஸ்ரீ யோக ராமர் கோவில் ( 1300 ஆண்டுகள் பழமையான கோவில்) நெடுங்குணம், (சேத்துப்பட்டு அருகில்), திருவண்ணாமலை மாவட்டம் வரலாறு ஏழாம் நூற்றாண்டில், பல்லவர்கள் இக்கோவிலின் கருவறையை மட்டுமே கட்டினார்கள் . பின்னர் 14-ஆம் நூற்றாண்டில், விஜயநகர பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயர், பாழடைந்திருந்த இக்கோவிலை சீரமைத்து , இக்கோவிலில் உள்ள அனைத்து மண்டபங்களையும் கட்டி இக்கோவிலை விரிவுபடுத்தினார் . யோகராமர் கோவிலின் சிறப் ப ம்சங்கள் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மிக பெரிய வைணவ கோவில். ராமர் தியான நிலையில் காணப்படுகிறார். கோதண்டம் (வில் மற்றும் அம்பு) இல்லாத ராமரை இங்கு மட்டும் காணமுடியும். கட்டிடக்கலை கோபுரங்கள் இக்கோவிலில் இரண்டு கோபுரங்கள் உள்ளன. - முதலாவது, ஆறு நிலை கொண்ட ராஜகோபுரம் - இரண்டாவதாக கிளி கோபுரம் . (சுக பிரம்ம மகரிஷி நினைவாக கிளி கோபுரம் என்று பெயரிடப்பட்டது) (வேதங்களை நான்காக பகுத்தவரும், புராணங்களில் பலவற்றை எழுதியவருமான வேதவியாஸரின் மகன் தான் சுக பிரம்மா மகரிஷி இவர் கிளி முகம் கொண்டவர்) விஜயநகர பேரரசின் கட்டிட கலைக்கு ...