சென்னகேசவா கோவில், சோமநாதபுரா, மைசூர்.

 சென்னகேசவா கோவில்

சோமநாதபுரா,
(மைசூர் அருகே),
 கர்நாடகா



கோவிலை அடைய
மைசூரில் இருந்து  35 கிமீ 
பெங்களூரில் இருந்து 134 கிமீ 
நரசிபுராவிலிருந்து  11 கிமீ
சத்தியமங்கலத்திலிருந்து 122 கிமீ 

வரலாறு
சென்னகேசவா கோவில் கர்நாடக மாநிலத்தில் மைசூர் அருகே காவிரிக்கரையில் அமைந்த  ஒரு இந்து மத வைணவ கோவில்.

1258 இல் கர்நாடகாவை ஆண்ட மூன்றாம்  நரசிம்மனின் தளபதி சோமநாத தண்டநாயகர் இக்கோவிலை கட்டினார்.

1311 இல் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் கஃபூர் இக்கோவிலை சேதப்படுத்தினான். 

1326 இல் முகமது பின் துக்ளக் இக்கோவிலை மிக மோசமாக சேதப்படுத்தினான்.

பின்னர் விஜயநகர பேரரசு மன்னர்கள், இக்கோவிலுக்கு மானியங்கள் பல வழங்கி இக்கோவிலை புனரமைத்தனர்.

கட்டிடக்கலை
சென்னகேசவா கோவில்  ஹொய்சாளர்களின் கட்டிடக் கலைக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

சென்னகேசவா கோயில் என்பது ஒரு திரிகூடம் ஆகும், இது மூன்று பிரகாசங்களைக் கொண்ட கோயிலாகும். ஒவ்வொரு கோயிலுக்கும் அதன் சொந்த விமானம் உள்ளது.

இக்கோவில் உலக மேடையை குறிக்கும் ஜகதியின் மேல் கட்டப்பட்டுள்ளது.
(ஜகதி - மூன்று அடி உயரமுள்ள நட்சத்திர வடிவம் கொண்ட மேடை)


மேடையில் 16 நட்சத்திர புள்ளியிலும் ஒவ்வொரு யானை இருந்தது. இப்பொழுது 11 மட்டுமே உள்ளது. (சுல்தான் அரசர்கள் 5 யானைகளை முற்றிலுமாக அழித்துவிட்டனர்)

  

வெளிப்புற சுவர்கள் :  கீழ் மட்டம்
ராமாயணம்
அனுமாரும் சுக்ரீவனும் ராமரை சந்திக்கும் வரை உள்ள நிகழ்ச்சிகள் இக்கோவிலின் வெளிப்புறச் சுவர்களில் சிறு சிறு சிற்பங்களாக மிக நுணுக்கமாக அழகாக சிற்பிகள் வடிவமைத்துள்ளனர்.

ராவணன் சீதாவை கடத்துகிறார்; ஜடாயு ராவணனுடன் சண்டையிடுகிறார். 

மகாபாரதம்
மகாபாரதம் முழுவதுமாக, நுணுக்கமாக, அழகாக சிற்பிகள் வடிவமைத்துள்ளனர்.

பஞ்ச பாண்டவர்கள் ரதத்தில் பயணிக்கின்றனர்;

பாகவத புராணம்
கிருஷ்ணரின் பிறப்பிலிருந்து, கிருஷ்ணர் கம்சனை கொல்லும் வரை உள்ள சிற்பங்களை நாம் கோவிலை சுற்றி காண முடியும்.

இடது புறம்
கிருஷ்ணர், அரக்கி புடானாவிடம் பால் குடித்து விட்டு அவளை கொல்லும் காட்சி.

வலது புறம்
ஷகாதசுரன் என்ற அரக்கனை கிருஷ்ணர் கொல்லும் காட்சி.

கிருஷ்ணர் வெண்ணெய் திருடுகிறார்

வெளிப்புற சுவர்கள் :  மேல் மட்டம்
வெளிப்புறச் சுவர்களின் மேல் மட்டத்தில் நாம் காண்பது...
- இந்துமதக் கதைகள் 
- மயில் கூட்டம்

- விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் 
- துர்க்கை, மகிஷாசுரமர்த்தினியாக 
- திருவிழாக்கள் 
- நடனம் ஆடுபவர்கள் 

- இசைக் கலைஞர்கள் 

- சிப்பாய்கள்

- வேடர்கள்
- யோகிகள் 
- ரிஷிகள் 
- கடவுளை வணங்குபவர்கள்  
- நாய்கள் 
- குழந்தையை வளர்க்கும் தாய்

தூண்கள்
அர்த்த மண்டபத்தில் ஒரு லேத்தில் செய்யப்பட்டது போல் இருக்கும் தூண்கள்.

     
                                      

இரண்டு தூண்களை தவிர அனைத்து தூண்களும் ஒரே அளவில் உள்ளன.

கிழக்கில் இருக்கும் இரண்டு தூண்கள் முப்பத்தி இரண்டு புள்ளிகள் கொண்ட நட்சத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

                                     


மேற்கூரை 
இக்கோவிலின் மேற்கூரை 16 விதமான சதுரங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

- இந்துமத  இறையியல் குறியீடு 
- பனை ஓலைகள் கரும்பொருள்

- தாமரை மொட்டின் வெவ்வேறு நிலைகள்

கர்ம வினையை குறிக்கும் முடிச்சு இல்லாத பாம்பு போல் வளைந்து, நெளிந்து செதுக்கப்பட்டிருக்கும் கல் 

படிக்கட்டுகளில் உள்ள குளத்தில் மலர்ந்திருக்கும் தாமரை மொட்டு 


கருவறைகள்
இக்கோவிலில் உள்ள கருவறைகள் மூன்று. 

மேற்கு கருவறை -  கேசவா 
வடக்கு கருவறை -  ஜனார்த்தனா 
தெற்கு கருவறை - வேணுகோபாலா

மேற்கு கருவறை -  கேசவா 
முகமது பின் துக்ளக் கேசவா சிலையை சேதப்படுத்தினான்.

அதன் பின்னர் ஆங்கிலேயர்கள் கேசவா சிலையை திருடிச் சென்று இங்கிலாந்தில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் அழகு பொருளாக வைத்துள்ளனர்.

கருவறையில் பூஜிக்கப்பட வேண்டிய சிலை அருங்காட்சியத்தில் அழகுப் பொருளாக...

வடக்கு கருவறை -  ஜனார்த்தனா 
இக்கருவறையில் நாம் காண்பது...
- ஜனார்த்தனாவின் நுணுக்கமான வேலைப்பாடுகளை கொண்ட ஆறடி சிலை

- ஒன்றரை அடி உயரமுள்ள கருட பீடம்
- விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்
- யோகா செய்யும் யோகநாராயணா

தெற்கு கருவறை - வேணுகோபாலா
இக்கருவறையில் நாம் காண்பது...
- நான்றரை அடி உயரம் உள்ள புல்லாங்குழல் வாசிக்கும் அழகான கிருஷ்ணர்

- வலதுகாலை வளைத்து, தலையை சற்று சாய்த்து புல்லாங்குழல் வாசிக்கும்        கிருஷ்ணரின் மயக்கும் வாசிப்பைக் கேட்டு மகிழ்ந்து நிற்கும் கடவுள்கள்,                மனிதர்கள் மற்றும் மாடுகள்
- யோகா செய்யும் லட்சுமி நாராயணா
- நடனமாடும் விஷ்ணு

நுழைவு கட்டணம்

இந்தியர்கள் : ஆன்லைனில் Rs. 20; பணமாக 25  
வெளிநாட்டவர் : ஆன்லைனில் Rs. 250; பணமாக 300

ஆன்லைனில் நுழைவுச்சீட்டு வாங்க

கோவில் திறந்திருக்கும் நேரம்
8:30 am - 5:30 pm (அனைத்து நாட்களும்)

Comments

Popular posts from this blog

SRI BHOOVARAAHA SWAMY TEMPLE