ஸ்ரீ யோக ராமர் கோவில்
ஸ்ரீ யோக ராமர் கோவில்
(1300 ஆண்டுகள் பழமையான கோவில்)
நெடுங்குணம்,
(சேத்துப்பட்டு அருகில்),
திருவண்ணாமலை மாவட்டம்
வரலாறு
ஏழாம் நூற்றாண்டில், பல்லவர்கள் இக்கோவிலின் கருவறையை மட்டுமே கட்டினார்கள். பின்னர் 14-ஆம் நூற்றாண்டில், விஜயநகர பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயர், பாழடைந்திருந்த இக்கோவிலை சீரமைத்து, இக்கோவிலில் உள்ள அனைத்து மண்டபங்களையும் கட்டி இக்கோவிலை விரிவுபடுத்தினார்.
யோகராமர் கோவிலின் சிறப்பம்சங்கள்
வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மிக பெரிய வைணவ கோவில்.
ராமர் தியான நிலையில் காணப்படுகிறார்.
கோதண்டம் (வில் மற்றும் அம்பு) இல்லாத ராமரை இங்கு மட்டும் காணமுடியும்.
கட்டிடக்கலை
கோபுரங்கள்
இக்கோவிலில் இரண்டு கோபுரங்கள் உள்ளன.
- முதலாவது, ஆறு நிலை கொண்ட ராஜகோபுரம்
- இரண்டாவதாக கிளி கோபுரம்.
(சுக பிரம்ம மகரிஷி நினைவாக கிளி கோபுரம் என்று பெயரிடப்பட்டது)
(வேதங்களை நான்காக பகுத்தவரும், புராணங்களில் பலவற்றை எழுதியவருமான வேதவியாஸரின் மகன் தான் சுக பிரம்மா மகரிஷி இவர் கிளி முகம் கொண்டவர்)
விஜயநகர பேரரசின் கட்டிட கலைக்கு எடுத்துகாடாக இருப்பது கோபுரத்தின் நுழைவாயிலில் இருக்கும் அழகான, நளினமான கொடி நங்கைகள்.
கோபுரத்தின் சுவர்களில் ராமாயண, தசாவதார, சுக்ரீவன் - வாலி சண்டை காட்சிகளையும் மற்றும் பல காட்சிகளையும் நாம் புடைப்பு சிற்பங்களாக காண முடியும்.
ராமர் வாலியின் மீது 7 மரங்கள் வழியாக அம்பு எய்தல்
கோபுர சுவர்களில் தசாவதாரம்
திருச்சுற்று
கிளி கோபுரத்தை அடுத்து மிக அழகான திருச்சுற்றை நாம் காண முடியும்.
திருச்சுற்று சுவர்களில்
கோஷ்டங்கள்
கும்ப பஞ்சரங்கள்
கோட்ட பஞ்சரங்கள்
ஆகியவற்றை நாம் காண முடியும்.
கோஷ்டம் என்பது கருவறையை சுற்றி அமைந்திருக்கும் வெளிப்புறச் சுவராகும்.
சிவாலயங்களில் உள்ள கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு, துர்க்கை போன்ற கடவுள்களின் சிலைகளை நாம் காண முடியும்.
திருச்சுற்று சுவர்களில் சிறிய கோவில் போன்ற அமைப்பில் காணப்படும் பஞ்சரங்கள் கோட்டப் பஞ்சரங்கள்.
கும்பம் இல்லாமல் தூண் மட்டுமே கொண்ட வடிவங்கள் கும்ப பஞ்சாரம் எனப்படும்.
மண்டபங்கள்
ராஜகோபுரத்தில் நுழைந்தவுடன் இடது பக்கம் 16 கால் ஊஞ்சல் மண்டபமும், அதற்கு நேர் எதிராக வலது பக்கத்தில் 100 கால் கல்யாண மண்டபமும் உள்ளது.
இவ்விரண்டு மண்டபங்களும் விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்களின் சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
இரண்டு மண்டபங்களின் தூண் முழுவதுமாக சிறு மற்றும் பெரு சிற்பங்களை சிற்பிகள் மிக அழகாக செதுக்கியுள்ளனர்.
கிளி மண்டபத்தின் மேற்கூரையில் அதன் பெயரைச் சித்தரிக்கும் வகையில் அழகிய சிற்ப வேலைப்பாடு உள்ளது.
- முழுமையாக மலர்ந்த தாமரை மலர்
- தாமரையின் மேல் அமர்ந்துள்ள அழகான கிளி
அனைத்தும் தலைகீழாக ...
கிளி மண்டபத்தின் ஒரு தூணில் கருவறையில் உள்ள யோக ராமரின் அழகிய முன்மாதிரி சிற்பத்தை காணமுடியும்.
தாயார் சந்நிதியின் தூண்களிலும் நிறைய சிற்ப வேலைப்பாடுகளை நாம் காண முடியும் .
யோக ராமர் கோவிலின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்
ராமரின் தோரணை
ராமர் கண்களை மூடிய தியான நிலையில், கைகளில் கோதண்டம் இல்லாமல்
காட்சியளிக்கின்றார்.
அவர் வலது கையை தனது இதயத்தின் மீது சின் முத்ராவில் வைத்துள்ளார்.
ஹனுமார் பிரம்ம சூத்திரம் படிக்க, ராமர் அதை கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்கோவில் கருவறை திருச்சுற்று கருவறையிலிருந்து சில அடிகள் கீழே அமைந்துள்ளது.
ஒருவர் சில படிகள் இறங்கியே கருவறையை சுற்றி வர முடியும்.
கருவறைக்கு எதிரே உள்ள ஒரு தூணில் கைகள் கூப்பிய நிலையில் நாம் கிருஷ்ணதேவராயரை காணமுடியும்.
இலங்கையில் ராவணனை வென்றுவிட்டு அயோத்தியா செல்லும் வழியில் சுக பிரம்மா ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்க ராமர் நெடுங்குணத்தில் ஒரு நாள் தங்கியதாக வரலாறு.
மூலவர் : யோக ராமர்
உற்சவர் : விஜய ராகவ பெருமாள்
தாயார் : செங்கமலவல்லி
தீர்த்தம் : சூர்ய தீர்த்தம்
துவாரபாலகர்கள்
திருவண்ணாமலையிலிருந்து (சேத்துபட்டு வழியாக) - 51 கி.மீ
ஈரோட்டில் இருந்து (திருவண்ணாமலை வழியாக) - 283 கி.மீ
சென்னையில் இருந்து (பெருங்களத்தூர் வழியாக) - 136 கி.மீ
தொடர்புக்கு :
பத்ரி பட்டாச்சாரியார்
94452 15776, 63809 47204



.jpg)
.png)
.png)






.jpg)


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.png)





Comments
Post a Comment