Posts

Image
  Mamallapuram - the Heaven of Mystery       Mamallapuram is one of the few Indian sites like the Ajanta caves, Ellora Kailasanathar temple, Badami rock-cut cave temples which attracted me like the explorers. Since the 18th century, Mamallapuram was frequented by explorers and archeological enthusiastics. What attracted me at Mamallapuram were the ancient Pallava dynasty monuments. Mamallapuram is known for its Rathas (monlolithic temples in the form of chariots), Mandapas (rock-cut cave temples), colossal open air bas-reliefs (descent of the Ganges & Krishna Mandapam) & structural temples. Being a UNESCO world heritage site, Mamallapuram show cases the Dravidan architecture with artistic excellence.
Image
    மாமல்லை -  எனக்கு பிடித் த  புரியாத புதிர்       அஜந்தா குகைகள் , எல்லோரா கைலாசநாதர் கோயில் , பாதாமியில்   பாறையில் வெட்டப்பட்ட குகைக் கோயில்கள் போன்ற சில இந்திய வரலாற்று பிரசதிப் பெற்ற இடங்களில் மாமல்லபுரமும் ஒன்றாகும் . வரலாற்று  ஆய்வாளர்களைப் போலவே   அவை   என்னை  கவர்ந்து  ஈர்த்தன .  18 ஆம் நூற்றாண்டிலிருந்து, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பாறையில் வெட்டப்பட்ட குகைக் கோயில்கள், பஞ்ச ரதங்கள், பிரம்மாண்டமான திறந்தவெளி புடைப்புச் சிற்பங்கள் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள கட்டமைப்பு கோயில்களை அடிக்கடி பார்வையிட்டனர்.  மாமல்லபுரத்தில் என்னை ஈர்த்தது பண்டைய பல்லவ வம்ச நினைவுச்சின்னங்கள் . மாமல்லபுரம் , அதன் ரதங்கள் ( தேர் வடிவில் உள்ள ஒற்றைக்கல்   கோயில்கள் ), மண்டபங்கள் ( பாறையில் வெட்டப்பட்ட குகைக் கோயில்கள் ), பிரமாண்டமான திறந்தவெளி புடைப்புச் சிற்பங்கள் ( கங்கையின் வருகை   & கிருஷ்ணா மண்டபம் ) மற்றும் கட்டமைப்பு கோயில்களுக்கு...

ஸ்ரீ யோக ராமர் கோவில்

Image
 ஸ்ரீ யோக ராமர் கோவில் ( 1300 ஆண்டுகள் பழமையான கோவில்) நெடுங்குணம், (சேத்துப்பட்டு அருகில்), திருவண்ணாமலை மாவட்டம் வரலாறு ஏழாம் நூற்றாண்டில், பல்லவர்கள் இக்கோவிலின் கருவறையை மட்டுமே கட்டினார்கள் . பின்னர் 14-ஆம் நூற்றாண்டில், விஜயநகர பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயர், பாழடைந்திருந்த  இக்கோவிலை சீரமைத்து , இக்கோவிலில் உள்ள அனைத்து மண்டபங்களையும் கட்டி இக்கோவிலை விரிவுபடுத்தினார் . யோகராமர் கோவிலின்  சிறப் ப ம்சங்கள் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மிக பெரிய வைணவ கோவில். ராமர் தியான நிலையில் காணப்படுகிறார். கோதண்டம் (வில் மற்றும் அம்பு) இல்லாத ராமரை இங்கு மட்டும் காணமுடியும். கட்டிடக்கலை கோபுரங்கள் இக்கோவிலில் இரண்டு கோபுரங்கள் உள்ளன.  - முதலாவது, ஆறு நிலை கொண்ட ராஜகோபுரம்  - இரண்டாவதாக கிளி கோபுரம் . (சுக பிரம்ம மகரிஷி நினைவாக கிளி கோபுரம் என்று பெயரிடப்பட்டது) (வேதங்களை நான்காக பகுத்தவரும், புராணங்களில் பலவற்றை எழுதியவருமான வேதவியாஸரின் மகன் தான் சுக பிரம்மா மகரிஷி இவர் கிளி முகம் கொண்டவர்) விஜயநகர பேரரசின் கட்டிட கலைக்கு ...

சென்னகேசவா கோவில், சோமநாதபுரா, மைசூர்.

Image
  சென்னகேசவா கோவில் சோமநாதபுரா, (மைசூர் அருகே),  கர்நாடகா கோவிலை அடைய மைசூரில் இருந்து  35 கிமீ  பெங்களூரில் இருந்து 134 கிமீ  நரசிபுராவிலிருந்து  11 கிமீ சத்தியமங்கலத்திலிருந்து 122 கிமீ  வரலாறு சென்னகேசவா கோவில் கர்நாடக மாநிலத்தில் மைசூர் அருகே காவிரிக்கரையில் அமைந்த  ஒரு இந்து மத வைணவ கோவில். 1258 இல் கர்நாடகாவை ஆண்ட மூன்றாம்  நரசிம்மனின் தளபதி சோமநாத தண்டநாயகர் இக்கோவிலை கட்டினார். 1311 இல் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் கஃபூர் இக்கோவிலை சேதப்படுத்தினான்.  1326 இல் முகமது பின் துக்ளக் இக்கோவிலை மிக மோசமாக சேதப்படுத்தினான். பின்னர் விஜயநகர பேரரசு மன்னர்கள், இக்கோவிலுக்கு மானியங்கள் பல வழங்கி இக்கோவிலை புனரமைத்தனர். கட்டிடக்கலை சென்னகேசவா கோவில்  ஹொய்சாளர்களின் கட்டிடக் கலைக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. சென்னகேசவா கோயில் என்பது ஒரு திரிகூடம் ஆகும், இது மூன்று பிரகாசங்களைக் கொண்ட கோயிலாகும். ஒவ்வொரு கோயிலுக்கும் அதன் சொந்த விமானம் உள்ளது. இக்கோவில் உலக மேடையை குறிக்கும் ஜகதியின் மேல் கட்டப்பட்டுள...