ஆத்மநாத ஸ்வாமி கோவில்

ஆத்மநாத ஸ்வாமி கோவில்

திருப்பெருந்துறை 
(எனும்)
ஆவுடையார் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம்


கோவிலை அடைய...
புதுக்கோட்டையிலிருந்து (அறந்தாங்கி வழியாக) - 53 kms
மதுரையிலிருந்து (சிவகங்கை, காளையார் கோவில், தேவகோட்டை வழியாக) -129 kms
திருச்சியிலிருந்து (புதுக்கோட்டை வழியாக) - 105 kms
கோவையிலிருந்து (திண்டுக்கல், காரைக்குடி வழியாக) - 297 kms 


கோவிலை பற்றி
பழங்கால தமிழ் சிற்பிகள் மற்றும் பொறியாளர்களின் கோவில் கட்டிடக்கலை திறமைக்கு இந்த கோவில் ஒரு சான்றாகும்.

இக்கோவிலின் சிறப்புகள் மொத்தம் 95...
அவற்றில் சில...

1. மாணிக்கவாசகர் கட்டிய கருவறை உள்ள கோவில், ஆத்மநாத ஸ்வாமி கோவில்.

மாணிக்கவாசகர்

2. மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றிய கோவில், ஆத்மநாத ஸ்வாமி கோவில். 

3. மாணிக்கவாசகர் பயன்படுத்திய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலைச்சுவடிகளும், எழுத்தாணியும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ள கோயில், ஆத்மநாத ஸ்வாமி கோயில்.

4. 1200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில், ஆத்மநாத ஸ்வாமி கோவில். 

5. உருவ வழிபாடு இல்லாத கோவில், ஆத்மநாத ஸ்வாமி கோவில். 
(கருவறையில் ஆவுடையார் மட்டுமே இருக்கும். சிவலிங்கம் இருக்காது)

6. கருவறையில் இருந்து மட்டுமே பக்தர்களுக்கு தீபம் காட்டப்படும் கோவில், ஆத்மநாத ஸ்வாமி கோவில். (தீபம் கருவறையில் இருந்து வெளியே கொண்டு வரப்படாது)

7. இரண்டு தூண்களில் ஆயிரம் தூண்கள் உள்ள கோவில், ஆத்மநாத ஸ்வாமி கோவில். (இது ஆயிரங்கால் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது)


8. கடினமான கல்லை, மர சட்டம் போல் இழைத்து, வளைத்து கொடுங்கையாக (Sun shade) செய்திருப்பதை அனைவரும் வியந்து காணக்கூடிய கோவில், ஆத்மநாத ஸ்வாமி கோவில். 




9. கற்களையே இரும்புச் சங்கிலி போல் செதுக்கி உயரத்தில் தொங்கவிடப்பட்டுள்ள கோவில், ஆத்மநாத ஸ்வாமி கோவில்.


10. தரையை தொட்டிருக்காத தூண்களை உள்ள கோவில், ஆத்மநாத ஸ்வாமி கோவில்.

11. யோக வகைகளை சித்தரிக்கும் கல்வெட்டுகள் உள்ள கோவில், ஆத்மநாத ஸ்வாமி கோவில்.

12. இடது காலுக்கு பதில் வலது காலை தூக்கி ஆடும் சிவன் உள்ள கோவில், ஆத்மநாத ஸ்வாமி கோவில்.


13. முருகன் வில் அம்புடன்  இருக்கும் கோயில், ஆத்மநாத ஸ்வாமி கோவில்.


14. பிரதோஷமும் தக்ஷிணாமூர்த்தியும் இல்லாத சிவன் கோவில், ஆத்மநாத ஸ்வாமி கோவில்.

15. இசை கல் தூண்கள் உள்ள கோவில், ஆத்மநாத ஸ்வாமி கோவில்.

16. மராட்டியம், கேரளா, கிரேக்கம், எகிப்து ஆகிய நாட்டுக் குதிரைகளை அழகான, உயிரோட்டமுள்ள சிற்பங்களாக செதுக்கி வைத்துள்ள கோவில், ஆத்மநாத ஸ்வாமி கோவில்.






17. சிவன் குதிரை வீரனாக, குதிரையின் மீது அமர்ந்துள்ள கோவில், ஆத்மநாத ஸ்வாமி கோவில்.  (மணிக்கட்டில் உள்ள தத்ரூபமான நரம்புகளை பாருங்கள்)


18. மிகப்பெரிய கல்லினால் ஆன தீப தூண்கள் உள்ள கோவில், ஆத்மநாத ஸ்வாமி கோவில்.


19. இது நகங்களா அல்லது கடினமான கல்லா என்று வியக்க வைக்கும் அழகான கால் நகங்கள் உள்ள கோவில், ஆத்மநாத ஸ்வாமி கோயில்


20. இது கடினமான கருங்கல்லா சதையா? என் எனத் தொட்டுப் பார்த்து, இல்லை இல்லை இது கருங்கல் தான் என்று வியக்க வைக்கும் அழகிய கால்களை உடைய கோவில், ஆத்மநாத ஸ்வாமி கோவில் (காலில் உள்ள வளைவுகள்)


வரலாறு

* பாண்டிய மன்னன் அரிமர்ன பாண்டியன் தனது மந்திரி மாணிக்கவாசகருக்கு    குதிரைகள் வாங்குவதற்கு நிறைய தங்கத்தை கொடுக்க...

*மாணிக்கவாசகரோ தங்கத்தை ஆத்மநாத ஸ்வாமி கோயில் கட்ட செலவு செய்ய... 

*அரசன் அவரை சிறையில் அடைக்க... 

*மாணிக்கவாசகரை காப்பாற்ற சிவன் கூலி தொழிலாளி உருவில் வர... 

*சிவனை மன்னர் சாட்டையால் அடிக்க... 

*அந்த சாட்டையடி தனது முதுகில் விழுவதை அரசன் உணர...

*அரசன் தன் முட்டாள் தனத்தை உணர... 

*கடைசியாக மன்னர் மாணிக்கவாசகரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க...
(இப்படியாக  போகிறது ஆத்மநாத ஸ்வாமி கோவிலின் கதை)


மூலவர்
ஆத்மநாதர் 

தாயார்
யோகாம்பாள்

தல விருச்சம்
குறுந்த மரம்

தீர்த்தம்
அக்னி தீர்த்தம்

பிரசாதம்
புழுங்கல் அரிசியும், பாகற்காய் கறியும், கீரையும், மூலஸ்தானத்தில் படைக்கல் என்கிற ஒரு திட்டுக்கல்லில் படைக்கப்படும்.

ஆத்மநாத கோவிலுக்கு செல்வோர், இக்கோவிலின் guide திரு. ஜானகிராமன் ஐயர் அவர்களை தொடர்பு கொண்டு, அவர் மூலமாக கோவிலை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வது பயன் தரும். 
அவருடைய அலைபேசி எண் 91598 54014


Comments

Popular posts from this blog

SRI BHOOVARAAHA SWAMY TEMPLE