ஸ்ரீ பூவராக ஸ்வாமி கோவில்
ஸ்ரீ பூவராக ஸ்வாமி கோவில்
ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டம்
(விருதாச்சலம் அருகே)
கோவிலை அடைய...
கடலூரிலிருந்து (வடலூர் வழியாக) - 68 கி.மீ
விருத்தாசலத்திலிருந்து - 22 கி.மீ
உளுந்தூர்பேட்டையிலிருந்து (விருத்தாசலம் வழியாக) - 40 கி.மீ
கும்பகோணத்திலிருந்து (ஜெயம்கொண்டான், கங்கைகொண்ட சோழபுரம் வழியாக) - 36 கி.மீ
சிதம்பரத்திலிருந்து - (புவனகிரி வழியாக) - 36 கி.மீ
தெய்வத்தின் பெயர்
ஸ்ரீ பூவராக ஸ்வாமி பெருமாள் (வராக அவதாரம்)
கோவிலை பற்றி
இந்த கோவில் வராகருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. (விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான பன்றி அவதாரம்)
வரலாறு
ஸ்ரீ பூவராக ஸ்வாமி கோவில் பத்தாம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. பின்னர் 16ஆம் மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் தஞ்சாவூர் நாயக்கர் மன்னர் அச்சுதப்ப நாயக்கர் இக்கோவிலை மேலும் விரிவும், அழகும் படுத்தினார்.
கட்டிடக்கலை
- அழகிய ஏழு நிலைகளைக் கொண்ட 150 அடி ராஜகோபுரம்
- இக்கோவிலில் உள்ள 16 கால் மண்டபம் நாயக்கர் கால கட்டிடக் கலையின் உச்சகட்டம்
- இக்கோவிலில் உள்ள தூண்கள் மன்னர் அச்சுதப்ப நாயக்கர், அவர் சகோதரர்கள், அரசவையை சேர்ந்தவர்கள், இசைக்கலைஞர்கள், நடன கலைஞர்கள் மற்றும் பல சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.
கல்லில் செதுக்கப்பட்ட ஒற்றை ஜடையுடன் கூடிய ஒரு பெண்ணின் சிற்பம்
மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் அரசவையை சேர்ந்த ஒருவர்
அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய குதிரையின் மேல் ஒரு போர் வீரன்
அயல் தேசத்தில் இருந்து ஒட்டகத்தில் இங்கு வந்த ஒரு வியாபாரி
(தலையில் அணிந்திருக்கும் அங்கியை கவனிக்கவும்)
உயர் குதிகால் செருப்பை (High Heels Slippers) அணிந்து உள்ள அழகிய பெண்
மூலவர்
- 2 அடி பூவராக ஸ்வாமி பெருமாள் சாலிகிராமக் கல்லில் செய்யப்பட்டுள்ளது.
- பூவராகரின் பன்றி முகம் தெற்கு நோக்கி உள்ளது.
- வராகர், அசுரன் ஹிரண்யாக்க்ஷனைக் கொன்றதால் வெற்றி பெற்ற நிலையில் நிற்கிறார்.
கோவிலில் உள்ள சன்னதிகள்
1. அம்புஜவல்லி தாயார் சந்நிதி
2. கருடர் சந்நிதி
3. ஆண்டாள் சந்நிதி
4. ராமானுஜர் சந்நிதி
5. நம்மாழ்வார் சந்நிதி
6. வேணுகோபால் சந்நிதி
7. வேதாந்த தேசிகர் சந்நிதி
8. திருமங்கை ஆழ்வார் சந்நிதி
9. மணவாள மாமுனிகள் சந்நிதி
10. குழந்தை அம்மன் சந்நிதி
11. திருக்கச்சி நம்பி சந்நிதி
வீர ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், விஜயநகர மன்னர்கள் மற்றும் உடையார்பாளையம் ஜமீந்தர்கள் இக்கோயிலுக்கு மானியம் வழங்கியுள்ளனர்.
இந்த கோவிலில் தெலுங்கில் உள்ள கல்வெட்டுகள் இந்த கோவிலுக்கு விஜயநகர பேரரசின் ஸ்ரீ ரங்க ராய தேவரால் வழங்கப்பட்ட மானியங்கள் பற்றி கூறுகிறது.
மத நல்லிணக்கம்
- இக்கோவிலில் அர்த்த மண்டபம் வரை சென்று பூவராக பெருமாளை வழிபட இஸ்லாமியர்களுக்கு அனுமதி உண்டு.
- கோவில் தேர்க்கான கொடி இஸ்லாமியர்களால் வழங்கப்படுகிறது.
- பூவராகவர் ஊர்ச்சவரின் மாசி மகம் திருவிழா ஊர்வலத்தின் போது, தர்காவின் இமாம் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினர் உற்சவரை வழிபடுவார்கள்.
கோவிலின் முக்கிய இடங்கள்
1. ராஜ கோபுரம்
2. அனைத்து பக்தர்களும் ராஜகோபுரத்தில் உள்ள படிக்கட்டுகளில் ஏறி அங்கு உள்ள இறைவனை தரிசிக்கலாம். இது இந்த கோவிலின் தனி சிறப்பு.
3. 16 தூண்கள் கொண்ட மண்டபம்
4. 16 தூண்கள் மண்டபத்தில் சிற்பங்களின் நுணுக்கமான வேலைப்பாடுகள்
5. ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு கல்லில் செதுக்கப்பட்ட ஒற்றை ஜடை முடியுடன் கூடிய ஒரு பெண்ணின் சிற்பம்
6. குதிரையில் ஒரு சிப்பாய்
7. மேற்கூரையில் தாமரை பதக்கச் சிற்பங்கள் உள்ளன
மூலவர்
ஸ்ரீ பூவராக ஸ்வாமி பெருமாள்
தாயார்
அம்புஜவல்லி தாயார்
ஊர்ச்சவ மூர்த்தி
ஸ்ரீ யக்ஞ வராகர் (யக்ஞ வராகர் திப்பு சுல்தானால் களவாடப்பட்டு இன்றுவரை கிடைக்கப்பெறவில்லை. இப்போது புதிதாகச் செய்யப்பட்ட மூர்த்தியே அபிஷேக ஆராதனை ஏற்றிருக்கிறார்.)
தல விருச்சம்
அரச மரம் (போதி மரம்)
தீர்த்தம்
நித்ய புஷ்கரணி
பிரசாதம்
முஷ்டாபி சூரணம்
(இறைவன் பன்றி அவதாரத்தில் இருப்பதால், கோரை கிழங்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது)
விமானம்
பாவனா விமானம்
கோயிலின் அழகையும் புனிதத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கோயிலின் அழகை ரசிக்க, அதிகாலையில் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.



.jpg)








Comments
Post a Comment